விண்ணின் ராஜன் வான வேந்தன்
1. விண்ணின்
ராஜன் வான
வேந்தன் ஏழ்மைக் கோலமாய்
மண்ணின்
மாந்தர் பாவம்
போக்க தாழ்மை உருவாய்
மேன்மை
இன்றி தம்மை தாழ்த்தி
தேவ பாலனாய்
தேவ சித்தம்
செய்யவே
ஈசாயின் துளிரே
தோன்றினார்
மேசியாவின்
ராஜன் தோன்றினார்
ஏசாயாவின்
கூற்றே தோன்றினார்
பாலனாய்
இம்மாந்தர்க்காய்
2. தூதர் சேனை வீணை மீட்டி
வாழ்த்தி பாடினார்
ஆயர்
கூட்டம் பாலன்
பாதம் தாழ பணிந்தார்
ஞானியரும்
விந்தை வெள்ளி
பின்னே தொடர்ந்தார்
கோமகனை
வாழ்த்தவே
3. உன்னதத்தில்
தேவனுக்கு மாறா
மகிமையும்
பூமியிலே
யாவருக்கும் மா
அமைதியும்
மாந்தர்மேலே
நின்பிரியம்
உண்டாவதாக
தூயோர்
போற்றி பாடினார்
Comments
Post a Comment