23 November 2023

துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியே

துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   துதி செய் நீ மனமே துதிகளைப் பாடியே

                        துதி பெற பாத்திரராம் தூயவர் இயேசுவை

 

1.         பரலோக மகிமை துறந்தவரை

            பாவ இவ்வுலகில் வந்தவரை

            பரிசுத்தராகவே வாழ்ந்தவரை

            பாவியை மீட்கவே வந்தவரை

 

2.         கருணையின் உள்ளம் படைத்தவரை

            குற்றங்கள் யாவையும் சுமந்தவரை

            குருசினில் எனக்காய் மரித்தவரை

            குருதியை சிந்தியே மீட்டவரை

 

3.         இயேசுவையன்றி வேறொருவர்

            காசினில் உண்டோ சொல் மனமே

            நேசரின் அன்பை என்றும் உணர்ந்து

            தாசரும் அவர் பாதத்தில் விழுந்து

 

4.         மானிடர் எல்லாரும் விட்டோடிடினும்

            மாசற்ற தேவன் நம்மோடிருப்பார்

            ஆர்ப்பரித்தே என்றுமே மகிழ்வேன்

            ஆண்டாண்டு காலம் நம்மை காப்பதால்

 

5.         நேசரின் மார்பினில் சார்ந்திடுவேன்

            நேசத்தால் நம்மை நிரப்பிடுவார்

            நாசம் என்றும் நம்மை அணுகாமலே

            ஆதரித்து என்றும் காத்திடுவார்

 

6.         நேசரின் வருகை நெருங்கிடுதே

            நாச லோகை விட்டு சென்றிடுவேன்

            எக்காள சத்தம் தொனித்திடுமே

            மத்திய ஆகாயத்தை சேருவோம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...