17 November 2023

தேவரீர் மகத்துவத்தை அணிந்திருக்கிறீர்

தேவரீர் மகத்துவத்தை அணிந்திருக்கிறீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          தேவரீர் மகத்துவத்தை அணிந்திருக்கிறீர்

            தேவரீர் வல்லமையை தரித்திருக்கிறீர்

                        உமக்கு ஒப்பானவர் யாருமில்லை

                        நிகரானவர் எவருமில்லை

                        இயேசுவே நீரே பெரியவர் - 2

 

1.         எகிப்தின் அடிமைத்தனத்தில்

            முற்பிதாக்களை மீட்டெத்தீர்

            செங்கடலை இரண்டாய் பிளந்து

            ஜனங்களை கடக்கப்பண்ணினீர் - உமக்கு

 

2.         யோசுவாவின் சொல்லை கேட்டு

            சூரியன் சந்திரனையும்

            ஒரு பகல் மட்டும் நடுவானில்

            தரித்து நிற்கச் செய்தவரே - உமக்கு

 

3.         மரித்த லாசருவை

            நான்கு நாட்கள் கழித்துமே

            உயிரோடு எழுப்பினீரே

            உம் வல்லமை எத்தனை பெரியது - உமக்கு

 

4.         மரணத்தை ருசி பார்த்தீர்

            அதனை ஜெயித்தும் எழுந்தீரே

            மீண்டும் வருவேன் என்றீர்

            எங்களை உம்மோடு சேர்த்துக் கொள்வீர் - உமக்கு

 

- சகோ. டேனியல்ராஜ், HFDM Gods Word

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...