27 November 2023

வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே

வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே?

                        பலதேசம் செல்லும்படி கூறினாரே!

                        வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே?

 

1.         எத்தனைக் கூட்டங்கள் இங்கே!

            எத்தனைக் கொள்கைகள் இங்கே!

            ஒன்றும் அறியாதோர் அங்கே!

            கோடிக் கோடியாக உண்டே!

            யாருமில்லை, இன்று யாருமில்லை

            இயேசுவை அறிவிக்க யாருமில்லை

 

2.         அரும்பெரும் கிருபையாம் வாழ்வு

            தெற்கிலே கருகிவிடாது

            தேவையான இடம் செல்ல

            வழிசெய்யும் இயேசுவே இராஜா!

            இஸ்ரவேலே எந்த நாள் வரைக்கும்

            எருசலேம் மதில்களில் முடங்கி நிற்பாய்?

 

3.         போட்டிப் பொறாமைகள் அகற்றி

            இயேசுவைப் பங்கிடல் தவிர்த்து

            விசுவாசிகள் யாரும் சேர்ந்து

            செயல்படும் காலம் இதுவே

            இயேசுவுக்கு இது மகிமை தரும்

            ஆத்துமாக்கள் யாவும் பயன் அடையும்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...