நான் நான் நான் என்று
நான் நான் நான் என்று
ஆட்டம் போடாதே
எல்லாம் என்னால் கூடும் என்று
திட்டம் தீட்டாதே
1. யவீரு ஜெப ஆலயத் தலைவனை
என்றும் மறவாதே
விசுவாசத்தால் எல்லாம் கூடும் என்பதை
மறவாதே - நான் நான்
2. நேர்மை என்பது உன்னிலிருந்தால்
உன்னைத் தாங்கிடுவார்
வாய்மை என்பது உன்னிலிருந்தால்
குடும்பம் உயர்ந்திடுமே
3. தாழ்மை என்பது உன்னலிருந்தால்
உன்னை உயர்த்திடுவார்
தூய்மை என்பது உன்னிலிருந்தால்
உன்னில் வாழ்ந்திடுவார்
4. உன்னை அறிந்த தேவன் உண்டு
கவலைப்படாதே
பயம் வந்தால் இயேசுவின் மீது விசுவாசம்
வைப்பாயே
நீ ஜெபத்தை
பெறுவாயே
நீ ஜெயத்தை
பெறுவாயே
Comments
Post a Comment