27 March 2024

நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்திடுவோம்

நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   நாம் கர்த்தருக்கு ஊழியம் செய்திடுவோம்

                        நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம் - 2

                        இந்த உலக மெய் ரட்சகர் இயேசுவல்லால்

                        இரட்சிப்பார் வேறு யாருமில்லை - 2

                        பாவ சாப ரோகங்கள் சிலுவையில் சுமந்தார்

                        பலியாக நமக்காக மரித்துயிர்த்தார் - நாம்

 

1.         இயேசு நம்மை நேசித்தார்

            இந்த அன்பு நம்மை நெருக்கி ஏவுகின்றதே

                        வேண்டாம் உலக ஆசைகள்

                        ஆண்டவர் சித்தம் செய்வோம் - 2 - நாம்

 

2.         நாமும் நற்கிரியைகள்

            நித்தம் செய்ய கிறிஸ்துவுக்குள்ளாய் சிருஷ்டிக்கப்பட்டோம்

                        பக்தி வைராக்கியம் உள்ளோராய்

                        பரமனின் சேவை செய்வோம் - 2 - நாம்

 

3.         மங்கா சுடர் ஒளியாய்

            மலைமேல் பட்டணம் போல் விளங்கிடுவோம்

                        நாடு நகரம் கிராமங்களில்

                        நற்செய்தியை கூறிடுவோம் - 2 - நாம்

 

4.         இயேசு பிரதி பலன்கள்

            ஏந்திக் கொண்டு வருவாரே நமக்களிக்க

                        மகனை கடாட்சிக்கும் தந்தைப் போல்

                        மகிமையில் வெளிப்படுவார் - 2 - நாம்

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=7rk5cpwhYwk

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

எம்மை ஜீவபலியாய்த் தந்தோம்

எம்மை ஜீவபலியாய்த் தந்தோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எம்மை ஜீவபலியாய்த் தந்தோம் - ஏசையா

                        எமதுள்ளம் நிறைந்தளித்தோமே - என்று

 

1.         பலிபீட கொம்பினில் இணைத்தீரல்லோ

            பலவீனர் பெலன் கொண்டு எழும்பிடுவோம்

            பிரகாசித்திட தயை பெற்றிட (2)

            பரன் பாதம் தாழ்த்தினோம் இறங்கிடுமே - தேவா

 

2.         குயவனின் கைகளில் களிமண்ணைப் போல்

            குறை நீக்கி வனைந்தெம்மை உருவாக்குவீரே

            உமது சித்தம் எமது பாக்யம் (2)

            உம்மை நம்பி தந்தோமே கிருபை கூருமே - தேவா

 

3.         எமதாவி ஆத்துமா சரீரம் எல்லாம்

            எமக்கல்ல உமக்கென்றும் உரித்தாக்கினீரே

            பிழைதீருமே பரிசுத்தரே (2)

            அழைத்தவர் நடத்துவீர் கடைசிவரை - தேவா

 

4.         விசுவாச சோதனை புடமிடவே

            விசுவாசம் பெருகிட பரிந்துரைத்தீரே

            சுகம் தந்தீரே ஜெயமீந்தீரே (2)

            இகத்தினில் நீரே எம் பரிகாரியே - தேவா

 

5.         பரிசுத்த பூரண மகிமையுடன்

            பரமனின் திருசாயல் அடைந்திடுவோமே

            தரிசனமே அளித்திடுமே (2)

            தமதன்பின் ஆவியைப் பொழிந்திடுமே - தேவா

 

6.         ஜெயங் கொண்ட தாசர்கள் பறந்திடவே

            ஜொலித்திடும் மணவாளன் வருகையின் நாளே

            ஜெபத்துடனே விழிப்புடனே (2)

            ஜெகத்தினில் காத்தென்றும் தவிக்கின்றோமே - தேவா

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=eiNtReOI0Mg

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...