01 May 2024

உள்ளங்கையில் என்னை வரைந்தீரையா

உள்ளங்கையில் என்னை வரைந்தீரையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          உள்ளங்கையில் என்னை வரைந்தீரையா

            தாயின், கருவிலே கண்டவரே - 2

            துன்பம் என்னை சூழ்ந்தாலும்

            இன்பம் இழந்து நின்றாலும்

            காப்பவர் நம்மோடுண்டே

 

                        காப்பவரே, என்னை நடத்துபவரே (நிலை)

                        நிறுத்தினீரே நீரே உயர்ந்தவரே

                        போற்றுவேன், என்றும் வாழ்த்துவேன்

                        கண்மணி போல, என்னை பாதுகாத்தீரே

 

1.         உம்மைப்போல என்னை படைத்தீரையா

            உந்தன், சேவைக்காய் அழைத்தவரே - 2

            போகையிலும், வருகையிலும்

            ஆழ்கடலில் மூழ்கையிலும்

            என் தேவன் என்னோடுண்டே - காப்பவரே

 

2.         கழுகை போல நானும் பெலனடைந்து

            செட்டை அடித்து மேலே உயர்ந்திடுவேன்

            நீதிமானாய் என்னை நீர் நிறுத்தினீரே

            ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திடுவேன்

            சிங்க கெபியில் நான் முடங்கி அடைபட்டாலும்

            ஜீவனுள்ள தேவன் என் அருகில் உண்டு

            சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜனே

            உமக்காய் என்றும் ஓடிடுவேன் - 2 - காப்பவரே

 

 

- Jefrey Paul

 

 

 

https://www.youtube.com/watch?v=YdZKP9YnIME

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...