தேவசுதன் புவிதனில் பிறந்தார்

தேவசுதன் புவிதனில் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

388. இராகம்: தோடி                                ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          தேவசுதன் புவிதனில் பிறந்தார்,

          நரருருவினை[1] மருவியே

 

                             அனுபல்லவி

 

            பாவக் கடலமிழ்ந்து ஜீவனிழந்த பேர்கள்

            யாவருக்கும் ரட்சை ஆவலாயளித்திட - தேவ

 

                             சரணங்கள்

 

1.         விண்ணுலகின் மகிமை விமலா[2] தெனினும்

            வீசும் சுடரொளியும் விடலரி தென்றும்

            மண்ணுலகத்தின் தீங்கு மா கொடிய தெனினும்

            மாந்தர் நிலை மிகத் தாழ்ந்ததே யெனினும் - தேவ

 

2.         தாழ்வில் நமை நினைத்து தம்மொரே பொன் மகவை

            தந்த தயாளர் வேறே எந்த ஈவை யருளார்?

            சூழ்விழி வென்றுந் தீர்த்துச் சுதந்திரராகச் சேர்த்து

            சோதரர்களாக்கிச் சோபிதம்[3] ஈந்திடுவார் - தேவ

 

- ஜே.எம். தாவீது

 

https://www.youtube.com/watch?v=z0oFkqaxdbM

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] நரர்-மானிட

[2] இன்பம்

[3] இன்பம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு