துதியின் ஆடை அணிந்து
துதியின்
ஆடை அணிந்து
துயரம்
எல்லாம் மறந்து
துதித்து
மகிழ்ந்திருப்போம்
- நம்
தூயவரில்
மகிழ்ந்திருப்போம்
1. இந்த
நாள் கர்த்தர்
தந்த நாள்
இதிலே
களிகூறுவோம்
புலம்பல்
இல்ல இனி அழுகையில்ல
இன்று
புசித்து கொடுத்து
கொண்டாடுவோம்
- துதி
துதித்து
துதித்து மகிழ்ந்திருப்போம்
துயரம்
அனைத்தும் மறந்திருப்போம்
2. கர்த்தருக்குள்
நாம் மகிழ்ந்திருந்தால்
அதுதானே தமது
பெலன்
எத்தனையோ
தன்மை செய்தவரை
இன்று
ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்
3. நன்றியோடும்
புகழ் பாடலோடும்
அவர்
வாசலில் நுழைந்திடுவோம்
நல்லவரே
கிருபையுள்ளவரே
என்று
நாளெல்லாம் உயர்த்திடுவோம்
4. புலம்பலுக்கு
பதில் ஆனந்தமே
இன்று
ஆனந்தம் ஆனந்தமே
ஒடுங்கிப்
போன ஆவி ஓடிப்போச்சு
இன்று
உற்சாக ஆவி வந்தாச்சு
5. துயரத்துக்கு
பதில் ஆறுதலே
இன்று
ஆறுதல் ஆறுதலே
சாம்பலுக்கு
பதில் சிங்காரமே
இன்று
சிங்காரம் சிங்காரமே
6. கர்த்தர்
தாமே நம்மை உண்டாக்கினார்
அவரின்
ஜனங்கள் நாம்
அவர்தாமே நம்மை
நடத்துகின்றார்
அவரின்
ஆடுகள் நாம்
- பெர்க்மான்ஸ்
https://www.youtube.com/watch?v=sFkjlsZTebs
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment