தூய பரப் பொருளே துன்புற ரட்சித்தருளே
326.
இராகம்: இந்துஸ்தானி
பல்லவி
தூய பரப் பொருளே,
துன்புற ரட்சித்தருளே
சரணங்கள்
1. நேய
பரனே, உனது நீதி
நெறி மறுத்துத்
தீய
நரர் ஆம் எளியர் செய்த
பாவம் பொறுத்து
- தூய
2. காவல்
எமக்குன்ன
அன்றிக் காண
யாரும் இலையே;
தேவன்
நீயே மேவும்
எங்கள் சிறந்த
கன்மலையே
- தூய
3. சுற்றிவரும்
கொள்ளை நோயில்
தொண்டர் மடியாமலே
பற்றதாய் வைத் தாதரித்தெம்
பாவ மதியாமலே
- தூய
4. எங்கள்
பிணையாக வந்த
ஏசுநாதர்
மூலமாய்ப்
பங்கம்
அற யாம் தழைக்கப்
பாரில் அனுகூலமாய்
- தூய
5. தீய
குணம் யாவையுமே
சிந்தையை
விட்டகற்ற
நாயனே, எப்போதும்
நாங்கள் நன்மைதனை
இயற்ற - தூய
- ஜாண்
பால்மர்
Comments
Post a Comment