10 May 2024

தேவ தேவனே இயேசு ராஜனே

தேவ தேவனே இயேசு ராஜனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவ தேவனே இயேசு ராஜனே

                        உம்மை காணும் இருதயம் மகிழும்

                        எனது எஜமானரே என் மனதின் மணவாளரே

 

1.         என் இதய சிங்காசனத்திலே

            வீற்றிருக்கும் என் இராஜாவே

            வானாதி வானங்கள் உமக்கிருக்க

            இந்த இதயம் தான் உம் வீடானதோ

            என்னில் நீர் வாழ்ந்திட

            என்ன நான் செய்தேனோ

 

2.         நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்

            நினைத்து நினைத்து ஏங்கினீரே

            நாம் உம்மை வெறுத்து ஓடின போதும்

            நீர் என்னை உயிராக நேசித்தாரே

            இதுதான் இயேசுவே அநாதி சிநேகமோ

 

3.         நான் உம்மை உயிராய் நேசிப்பதைவிட

            நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே

            பாவியில் நான் பெரும் பாவியாய் வாழ்ந்தும்

            பாசமாய் உயிரையே கொடுத்தீரே

            இதுதான் இயேசுவே அன்பின் எல்லையோ

 

 

- Ps. Messiah Selvakumar

 

 

https://www.youtube.com/watch?v=PJwGO8fRVWU

https://www.youtube.com/watch?v=t07RaGeJYZ8

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...