13 May 2024

தேவாதி தேவன் சிலுவையிலே

தேவாதி தேவன் சிலுவையிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தேவாதி தேவன் சிலுவையிலே

            எனக்காய் இரத்தம் சிந்தினாரே

            பாவி என் பாவத்தை மன்னிக்கவே

            தந்தார் தன் ஜீவனையே

 

                             அனுபல்லவி

 

                        எந்தன் பாவம் யாவும் நீங்கிற்றே

                        எந்தன் சாபம் யாவும் ஓடிற்றே

                        மாந்தர் யாரும் செய்யா தியாகத்தை

                        எனக்காய் செய்தார் கிறிஸ்துவே

 

                             சரணங்கள்

 

1.         பாவத்தின் சம்பளம் மரணம் என்றே

            கலங்கி நான் நின்ற வேளையில்

            திகையாதே மகனே என் கிருபை

            வரம் உன்னை மீட்கும் என்றாரே

 

2.         பாதைகள் எங்கும் தடை கற்களால்

            முடிந்தது என்று நினைத்தேன்

            உனக்கான வழிகளைத் திறந்திடுவேன்

            பிரகாசிப்பாய் நீயும் என்றாரே

 

 

 

- P. ANISH BABU

 

 

 

https://www.youtube.com/watch?v=BfhmpJ4O-KI

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...