01 May 2024

ஆராய்ந்து முடியாத பெரும்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆராய்ந்து முடியாத பெரும்

            காரியங்கள் செய்தவரே

            எண்ணி எண்ணி முடியாத பல

            நன்மைகளை செய்தவரே

 

                        நன்றி நன்றி நன்றி உமக்கே - இயேசு ராஜா

                        நன்றி நன்றி நன்றி உமக்கே

 

1.         நான் பிறந்த நாள் முதலாய்

            ஆதரித்து வந்தவரே (2)

            குறைவு பட்ட நாட்களிலே - நான் (2)

            என் குறைகளெல்லாம் தீர்த்தவரே (2)

 

2.         தாழ்மையிலே வாழ்ந்த என்னை

            தயவு வைத்து நினைத்தவரே (2)

            சிறுமைப்பட்ட நாட்களிலே - நான் (2)

            என் சிறையிருப்பை மாற்றினீரே (2)

 

3.         சீரழிந்த தேசத்திலே - என்னை

            சீர்படுத்தி உயர்த்தினீரே (2)

            துயரப்பட்ட நாட்களிலே - நான் (2)

            உம் துதிகளினால் நிரப்பினீரே (2)

 

 

- Pastor. P. Raju

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...