தேவ சுதனைத் துதி செய் எனதுள்ளமே

தேவ சுதனைத் துதி செய் எனதுள்ளமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

321. இராகம்: உசேனி                              ஆதி தாளம் (477)

 

                             பல்லவி

 

          தேவ சுதனைத் துதி செய்-எனதுள்ளமே,

          தேடி? அவர் தயவைப் பாடி, மன்றாடி இன்று

 

                             அனுபல்லவி

 

                        ஜீவ தயாபர ரான யெகோவாவின்

                        திருச்சுதனாகிய கிறிஸ்தெனும் ரட்சகர்

                        பாவ விமோசனராகச் சிலுவையில்

                        பாடுபட் டிறந்துயிர்த் தெழுந்துனை மீட்டவர் - தேவ

 

                             சரணங்கள்

 

1.         வானும், புவியும், திரையும்-அவைகளின் உள்

            வஸ்து பலவும் தோன்ற விஸ்தரித் தமைத்து;

            வாழும் காலத்துக்குத் தக்க-நன்மைகள், உனைச்

            சூழும் செயல்கள் மிகுக்கக் கொடுத் துயர்த்தி,

            போன வருடம் முழுதும்-நடத்திக் காத்து,

            புதுவருடமாம் இதில் சதுருடன்[1] கொண்டு வந்து,

            போதகரும் சபைகளும்-சிநேகிதரும்

            வேத நெறியை எடுத்துப் பாராட்ட, தேவ

            ஞானமும் நீதியும் பரி-சுத்தமும் மீட்பும்

            ஞயமுடனாகிய கிறிஸ்தேசு உன் பெல

            ஈனமதில் உதவி செய்து-நிற்கிறார்;

            இன்பமுடன் அவர் அன்பதில் நிலைத்து நில் - தேவ

 

2.         சத்துருக்கள், சோதனைகள்-துன்பங்கள், நோய்கள்

            சாரும் கவலைகளும் சீறும் பசாசுகளும்

            சதியாய் உன்தனைப் பிடிக்க-வளைந்தும் ஜீவ

            அதிபதி வந்துனை அடுக்க நின்றுன்னைக் காத்து

            பத்திரமாக நடத்தி,-நீ செய்த பல

            பாவச் சுமையை அவர் தாவிச் சுமந்து தீர்த்து,

            பரிசுத்த கூட்டத்துடனே-அன்பின் விருந்தை

            தரிசத்துட் கொள்ள உன்தனைச் சேர்த்த தயவை

            உத்தம கீழ்ப்படிதலுடன்-அனுதினம்

            ஊக்கமாய் உணர்ந்து, நல் தீர்க்கமாய் ஜெபம் செய்து,

            அத்தன்[2] வருகைக்குக் காத்து-எதிர்நோக்கி

            ஆயத்தமாய் இரு; சாயுச்சியம்[3] அடைந்திட - தேவ

 

3.         ராஜர் துரைகள் தலைவர்-பிரபுக்களும்

            ராஜ்யக் குடிகளும் மாட்சிமையுள்ள தேவ

            ரட்சிப்படைந்து தழைத்துச்-சமாதானமாய்ப்

            பட்சத்துடனே நடந்து, வாழ்க! பூ எங்கும்

            வாசம் செய் போதகர்களும்-தேவ தயவை

            வாழ்த்தி, பணிந்து புகழ்ந்து தேத்தும் கிறிஸ்தோர்களும்

            வல்லமை கொண்டு செழித்து, சுவிசேஷத்தைச்

            சொல்லும் திறத்தில் கதித்து[4] வாழ்க! சகல

            தேசங்கள், பாஷைகள், கோத்-திரங்களெல்லாம்

            தேவாதி தேவன் எனும் கர்த்தராகிய மேசி

            யாவின் அரசாட்சியைச் சேர்ந்திட

            விண்ணப்பமும் ஜெபமும் வளந்தேறிட - தேவ

 

- மரியான் உபதேசியார்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] வல்லமை

[2] இறைவன்

[3] ஐக்கியம்

[4] பெருகி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு