தென்றலே தென்றலே பரிசுத்த ஆவி
தென்றலே தென்றலே பரிசுத்த
ஆவி என்ற தென்றலே
எங்கள்
மேல் வீசிடு
அக்கினியாய்
மாற்றிடு
எழுப்புதலாய்
வாழச் செய்திடு
1. ஆதியிலே
ஜலத்தின்
மேல்
அசைவாடின
ஆவியே
அடிமை மேல்
இறங்கிடுமே
வெறுமையான
பூமியை நிரப்பினீரே
வரங்களாலே
எங்களையும் நிரப்பிடுமே
2. உலர்ந்து
போன எலும்பெல்லாம்
உயிர் பெற்று
எழுந்ததே
ஒரு தரம்
இறங்கி வாருமே
காலூன்றி
சேனைகளாய்
நின்றது போல்
சாட்சிகளாய்
நாங்கள் கூட எழும்பணுமே
3. பெந்தெகொஸ்தே
நாள்தனிலே
மேல் வீட்டு
அறையினிலே
இறங்கின
விண்ணக காற்றே
தென்றலாய்
மாறி வா எங்கள்
மேலே
இந்தியா
வாழ வேண்டும் உந்தனாலே
Comments
Post a Comment