தேவ சுதன் மீட்டெடுத்த சபையே

தேவ சுதன் மீட்டெடுத்த சபையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தேவசுதன் மீட்டெடுத்த சபையே

                        என்றும் கர்த்தரின் புகழைப் பாடு

                        சொல்லுங்களேன் அவர் நாமத்தையே

                        போற்றுங்களேன் துதி சாற்றுங்களேன்

                        மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம்

 

1.         வல்லமையாக இறங்கிடுவார்

            தேவனின் ஆவி சத்திய பாதை நடத்திடுவார்

            துணையாய் வருவார்

            அவர் வல்லமை நம் மீது பொழியும்

            உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம்

            தினம் ஜெயத்தை அடைய துதிப்போம்

 

2.         தம்புரு வீணை நாதம் இசைக்க

            பேராசையுள்ள கைத்தாளத்தின்

            தொனி முழங்க ஆவியால் நிறைவோம்

            புது பெலனை அடைந்து துதிப்போம்

            உற்சாகத்தோடு பொற் பாதம் பணிவோம்

            அவர் சமூகம் என்றென்றும் இன்பமே

 

3.         தேவ ஜனங்கள் துதிப்பதினால்

            தேவனின் உள்ளம்

            பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான்

            தேவகிருபை நம் மீது பொழியும்

            சத்துரு சேனை வெட்டியே வீழ்த்த

            தேவ ஆவியில் நிறைந்து துதிப்போம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு