தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார்

                        பரிசுத்தரின் மத்தியில் பரன்

                        இயேசு உலாவுகிறார்

 

1.         பயத்தோடே நல் பக்தியோடே

            தேவனை ஆராதிப்போம்

            வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம்

 

2.         ஆபத்து நாளில் அரணாம் கோட்டை

            நித்திய கன்மலையே

            யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே

 

3.         இராப்பகலாய் தன் கண்மணி

            தூங்காது காப்பவரே

            தாயினும் மேலான தாங்கி ஆதரிப்பார்

 

4.         உலகின் முடிவு வரைக்கும் நான்

            உன்னோடிருப்பேன் என்றாரே

            அல்பா ஒமேகா என்றும் நாமத்தோரிவர்

 

5.         சாத்தானின் கோட்டை தகர்ந்தொழிய

            ஏகமாய் துதித்திடுவோம்

            சாத்தானை ஜெயித்த இயேசு நமக்குண்டே

 

6.         ஓசன்னா பாடி ஆர்ப்பரிப்போம்

            உன்னத தேவனையே ஜே

            ஜெயராஜனுக்கு ஜெயம் முழங்கிடுவோம்

 

 

https://www.youtube.com/watch?v=fU98_DCFFSM

 

 

https://www.youtube.com/watch?v=llO8DSRp6ZU

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே