01 May 2024

துதிப்போம் துதிப்போம் நம் தேவ தேவனை

துதிப்போம் துதிப்போம் நம் தேவ தேவனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   துதிப்போம் துதிப்போம் நம் தேவ தேவனை

                        நினைப்போம் நினைப்போம் அவர் செய்த நன்மையை

                        உன்னதத்தின் ஆவி தந்து

                        நம்மை தூய்மையாக்கிய

                        இயேசுவை நாம் போற்றுவோம்

 

1.         வானம் பூமி படைத்து ஆளும் தேவனை

            வல்ல கிரியை செய்யும் இயேசு ராஜனை

            பரிசுத்த மனத்தில் பரமன் தன் புகழை

            போற்றி புகழ்ந்து பாடியே மகிமை காணுவோம்

 

2.         தூய இரத்தம் சிந்தி நம்மை மீட்டவர்

            பாவ சேற்றிலிருந்து தூக்கி எடுத்தவர்

            அன்பினால் நிறைந்து பரலோகம் துறந்து

            நம்மை தேடி வந்தவர் அன்பைச் சொல்லியே

 

3.         துன்பம் வாழ்வில் சூழ்ந்து வந்த நேரத்தில்

            தூய ஆவி கொண்டு நம்மை தேற்றினார்

            கைவிடா என்றும் கருத்தாக காக்கும்

            கர்த்தர் புகழைப் பாடுவோம் காலம் தோறுமே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...