கலங்க மாட்டோம் நாங்கள் கலங்க மாட்டோம்

கலங்க மாட்டோம் நாங்கள் கலங்க மாட்டோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   கலங்க மாட்டோம் நாங்கள் கலங்க மாட்டோம்

                        கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம்

                        என்ன வந்தாலும் எது வந்தாலும்

                        இயேசுவின் நாமத்தில் கொடியேற்றுவோம்

 

1.         துன்பங்கள் தொல்லைகள் நெருங்கி வந்தாலும்

            கண்ணீரின் பள்ளத்தாக்கு குறுக்கே வந்தாலும்

            ஏசுவின் கரங்கள் அணைத்து நடத்தும்

            எந்நாளும் அவர் நிழல் மறைத்து நடத்தும்

 

2.         எரிகோவின் மதில்கள் எழும்பி நின்றாலும்

            எக்காள தொனிகளால் இடித்து நாம் தகர்ப்போம்

            சிங்கம் போல் சத்துரு சீறி வந்தாலும்

            யூதாவின் சிங்கமாம் இயேசு வருவார்

 

3.         வியாதியும் வருத்தமும் வறுமை வந்தாலும்

            வல்லமை தேவன் வெற்றியைத் தருவார்

            வருகையில் தேவன் சீக்கிரம் வருவார்

            மகிமையில் நம்மையும் சேர்த்துக் கொள்வார்

 

4.         அக்கினி சூளைகள் சூழ்ந்து வந்தாலும்

            அக்கினி தேவன் நம் துணையாக வருவார்

            அலையும் காற்றும் சீறிப்பாய்ந்தாலும்

            அற்புத தேவன் அதிசயம் செய்வார்

 

 

- APOSTLE DR. A. JAWAHAR SAMUEL

 

 

https://www.youtube.com/watch?v=KucIhNgsBRk

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு