துதியில் தேவா வருவாய்

துதியில் தேவா வருவாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதியில் தேவா வருவாய்-நான் துதித்து

                        துதித்து உம்மை பாடி மகிழ்ந்திடவே

                        தூயவர் கோனே துணை புரிமானே

                        தூய்மை கிடைக்குமென்றே

                        துதிக்கிறேன் நானே

 

1.         துன்பம் இந்நேரம்-உம்மை தொடரத்

            தொடரப் பெயின் கோபம் மிகுந்திடுதே

            இன்பம் மிகுமே தம்பிரான் பாதம்

            கெம்பீரம் பாடி அம்புவி ஏக

 

2.         கங்குலே இந்நேரம் - உம்மை கலக்கம்

            துலக்கமின்றி மயங்கித் தியங்குகிறேன்

            காடிதான் தேனோ கல்வாரி மலையில்

            கருதுவோர் பருகும் கானாவூர் இரசமே

 

3.         அகமே வரந் தருவாய்-நான் அல்லும்

            பகலுமும்மை பாடி மகிழ்ந்திடவே

            தியாகஞ் செய்யவே யேகோவா பாதம்

            தாகம் மிகுந்தேன் ஏழை இந்நேரம்5

 

4.         ஆறு இலட்சம் பேரில் - நடு உதித்து

            உதித்துச் சென்ற அதிரூப சொரூபா

            கூறினீரல்லோ கூடியிருக்கக்

            கொற்றவன் சேவை குறைவின்றி ஒழுக

 

5.         மகிபன் இயேசு துரையே - நான் மகிழ்ந்து

            மகிழ்ந்து தினம் பாடித் துதித்து வரும்

            மங்கையர் கானம் மாசில்லாதல்லோ

            தங்க பொன்னேசு சர்வாதிகாரா

 

https://www.youtube.com/watch?v=nhHmSm5ap5M

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு