02 May 2024

தூய தூய தேவனை

தூய தூய தேவனை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தூய தூய தேவனை

            துதிகள் நடுவில் வசிப்போரை

            தூய்மை கொண்ட இதயத்துடன்

            துதிகள் செலுத்தி போற்றுங்கள்

            அல்லேலூயா அல்லேலூயா

 

                        உன்னதர் உன்னதர் உன்னதரே

                        உலகினை காக்கும் உயர்ந்தவரே

 

1.         ஒளியும் வழியும் ஆனவரே

            ஒருவராய் அதிசயம் செய்பவரே

            உலகை மீட்க பலிப் பொருளாய்

            உன்னதம் துறந்த தூயவரே

            அல்லேலூயா அல்லேலூயா

                        பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

                        பாவியை நேசிக்கும் நல்லவரே

 

2.         ஆதியும் அந்தமும் ஆனவரே

            ஆறுதல் தேறுதல் அளிப்பவரே

            ஆவியின் ரூபமாய் எங்களிடம்

            வசித்திடும் ஆவியானவரே

            அல்லேலூயா அல்லேலூயா

                        சத்திய ஆவியை வாழ்த்துகிறோம்

                        நித்திய தேவனை போற்றுகிறோம்

 

3.         துதிக்கின்றோம் நம் தேவனை

            துதிக்கின்றோம் நம் இயேசுவை

            துதிக்கின்றோம் ஆவியானவரை

            துதிக்கின்றோம் திரியேகரை

            அல்லேலூயா அல்லேலூயா

                        மகிமை உமக்கே செலுத்துகிறோம்

                        மாட்சிமை உமக்கே படைக்கின்றோம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...