02 May 2024

தூய தேவனைத் துதித்திடுவோம்

தூய தேவனைத் துதித்திடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தூய தேவனைத் துதித்திடுவோம்

                        நேயமாய் நம்மை நடத்தினாரே

                        ஓயா புகழுடன் கீதம் பாடித் தினம்

                        போற்றியே பணிந்திடுவோம்

                        அல்லேலூயா

 

1.         கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்

            கனிவுடன் நம்மை அரவணைத்தே

            நம் கால்களை கன்மலையின் மேல்

            நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்

 

2.         யோர்தானைப் போல்

            வந்த துன்பங்களை

            இயேசுவின் பெலன் கொண்டு

            கடந்து வந்தோம்

            அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டே

            பரிசுத்த பாதையில் நடந்திடுவோம்

 

3.         கழுகுக்குச் சமமாய் நம் வயது

            திரும்பவும் வால வயதாகும்

            புது நன்மையால் புது பெலத்தால்

            நிரம்பியே நம் வாயும் திருப்தியாகும்

 

4.         தாவீதுக்கருளின மா கிருபை

            தாசராம் நமக்குமே தந்திடுவார்

            எலிசாவைப் போல் இருமடங்கு

            வல்லமையால் நம்மை

            அபிஷேகிப்பார்

 

5.         நலமுடன் நம்மை இதுவரையும்

            கர்த்தரின் அருள் என்றும் நிறுத்தியதே

            கண்மணி போல் கடைசி வரை

            காத்திடும் கர்த்தரை போற்றிடுவோம்   

 

https://www.youtube.com/watch?v=Obw4ko-tfzU

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...