06 May 2024

தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்

தெய்வத்துவத்தின் பரிபூரணம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தெய்வத்துவத்தின் பரிபூரணம் எல்லாம்

                        இயேசுவில் இருக்கக் கண்டோம்

                        அவருக்குள் ஞானம், மீட்பு, தூய்மை

                        பொக்கிஷவைப்பாய்க் கண்டோம்

 

1.         விசுவாசத்தில் மெத்த உறுதிப்படுவோம்

            இயேசுவின் சாயலை அணிந்திருப்போம்

            அவரோடும் மரித்துயிர்த்தெழுந்தே

            மகிமையாய் மலர்ந்திருப்போம்

            மேலானவைகளை நாடுவோம்

            மேலோக வாசிகளாய் இருப்போம் - அவரோடு

 

2.         இயேசுவை எந்நாளும் சேவிப்போம்

            வேதத்தின் முன்னே நடுங்கி நிற்போம்

            சொல் செயலாலும் அனுதின வாழ்வில்

            கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்

            மேலானவைகளை நாடுவோம்

            மேலோக வாசிகளாய் இருப்போம் - சொல் செயல்

 

3.         ஞாலமெங்கும் தேவதூது சொல்வோம்

            ஞானமாய் காலத்தை செலவழிப்போம்

            ஜெபதூபம் ஸ்தோத்திரத்தோடே

            ஜெயமாக வாழ்ந்திருப்போம்

            மேலானவைகளை நாடுவோம்

            மேலோக வாசிகளாய் இருப்போம் - ஜெப தூபம்

 

 

 

https://www.youtube.com/watch?v=jdTLHb5e0ik

https://www.youtube.com/watch?v=njxyYomcdDQ

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...