01 May 2024

துதியில் வாழ்பவரே துதிக்குப் பாத்திரரே

துதியில் வாழ்பவரே துதிக்குப் பாத்திரரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          துதியில் வாழ்பவரே துதிக்குப் பாத்திரரே

          எனக்குள் வாழ்பவரே எந்தன் நல்மேய்ப்பரே

 

                        ஆராதனை வல்லமை மாட்சிமை

 

1.         ஆயுள் உள்ளவரை ஆராதிப்பேன்

            ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

            சபையின் நடுவிலும் ஆராதிப்பேன்

            சர்வ வல்லவர் நீர்தானய்யா

 

2.         கோடான கோடி பரிசுத்தர்கள்

            பாடல்கள் பாடி பணிகின்றனர்

            வானாதி வானங்களும் போற்றும் உம்மை

            அல்பா ஒமேகா நீர்தானய்யா

 

3.         வெள்ளை சிங்காசனம் அமர்ந்தவரே

            தூதர்கள் நடுவில் ஜொலிப்பவரே

            அக்கினி ஆவியால் நிரப்புகின்ற

            அபிஷேக நாதரும் நீர்தானய்யா

 

4.         துதியும் கனமும் மகிமை எல்லாம்

            தூயவர் உமக்கே செலுத்துகிறோம்

            ராஜாதி ராஜாக்களும் நடுங்குகின்ற

            அதிகாரம் வல்லமை நீர்தானய்யா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...