07 May 2024

தேடி இயேசு வந்தார்

தேடி இயேசு வந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேடி இயேசு வந்தார்

                        என்னைத் தேற்றி வாழவைத்தார்

1.         கண்ணீர் கடலினிலே

            நான் கதறி மூழ்கையிலே

            கர்த்தர் தம் கரம் நீட்டினார்

            என் கண்ணீரெல்லாம் துடைத்தார்

2.         பாவச் சேற்றினிலே

            நான் மூழ்கிப் போகையிலே

            கல்வாரி இரத்தத்தாலே

            கழுவி மீட்டுக் கொண்டார்

3.         நோயின் பிடியினிலே

            நான் வாடித் தவிக்கையிலே

            இயேசுவின் தழும்புகளால்

            சுகமானேன் சுகமானேன் - நான்

4.         எத்தனை ஆண்டுகளோ - நான்

            இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்

            மகராஜன் இயேசு வந்தார்

            மகனாய் ஏற்றுக் கொண்டார் - என்னை

 

 

https://www.youtube.com/watch?v=XmRoajaKet0

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...