தேவ ஜனமே சும்மாயிரு

தேவ ஜனமே சும்மாயிரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                        தேவ ஜனமே சும்மாயிரு

                        கர்த்தர் உனக்காய் யுத்தம் செய்கிறார்

                        அமர்ந்திருந்து அறிந்து கொள்ளு

                        அவரே தேவன் என்று

 

1.         கிரியை கிரியை அபூர்வ கிரியை செய்திடவும்

            அவருக்கே அன்றி எவருக்கும் தெரியா

            நாமத்தில் வெளிப்படவும்

            எல்ஷடாய் கடந்து செல்கிறார்

            எதிரிகளை துவம்சம் செய்கிறார்

            என்னையோ மீட்டுக் கொள்வார்

 

2.         தேவனின் தேவனின் மவுனம் மவுனம் கலைகிறது

            என் ஜனமே சீக்கிரமாய்

            பேழைக்குள் பிரவேசி

            சினம் கடந்து போகிறது

            கொஞ்ச நேரம் ஒளித்துக் கொள்ளு

            இயேசுவுக்குள் ஒளிந்து கொள்ளு

 

3.         இராஜா இராஜா இராஜாதி ராஜா வருகின்றாரே

            இருப்பு கோலால் ஆளுகை செய்ய

            இரக்கத்தை கைவிட்டாரே

            இன்னல் சிறகை விரிக்கிறது

            எங்கும் பறந்து போகிறது

            எல்லாம் புதிதாய் ஆகிறது

 

 

https://www.youtube.com/watch?v=45dQTfnMGTI

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு