தெய்வம் இவர் தெய்வம் இவர் எங்கள் குல

தெய்வம் இவர் தெய்வம் இவர் எங்கள் குல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

64. இராகம்: நாதநாமக்கிரியை                  ரூபகதாளம்

 

                             பல்லவி

 

          தெய்வம் இவர், தெய்வம் இவர்-எங்கள் குல

          தெய்வம் இவர் தானே.

 

                             அனுபல்லவி

 

            கைவருந்தாமல் உலகம் கற்பித்த தெய்வம் இவர்;

            கர்த்தத்துவங்கள், நித்திய கர்த்தர் என்னும் தெய்வம் இவர் - தெய்வ

 

                             சரணங்கள்

 

1.         எல்லாவற்றையும் அமைத்த வல்லாண்மை தெய்வம் இவர்;

            பல்லுயிர்க்கும் ஈவளிக்கும் பாக்கியமிகும் தெய்வம் இவர் - தெய்வ

 

2.         சந்திரர்க்கும், சூரியர்க்கும் அந்தரர்க்கும்[1] தெய்வம் இவர்;

            சுந்தரச் சீயோன் மலையில் தோத்திரிக்கும் தெய்வம் இவர் - தெய்வ

 

3.         கேரூபின் மீதேறி வல சாரிவரும் தெய்வம் இவர்;

            ஆறுலட்சம் கானகர்[2] ஆராதனை செய் தெய்வம் இவர் - தெய்வ

 

4.         காலா காலங் கடந்த காட்சி இவர் மாட்சி இவர்,

            ஆலேலூயா அமரர்[3] அஞ்சலி செய் தெய்வம் இவர்; - தெய்வ

 

- சத்தியநாதன் உபதேசியார்

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] வானோர்

[2] பாடகர்

[3] வானோர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு