துறவற மேவி வேத

துறவற மேவி வேத

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

91. இராகம்: இந்துந்தானி.                                                                                                 தாளம்: ஆதி

 

                                                பரிசுத்த யோவான் ஸ்நானகனின் திருநாள் - சூன் 14ஆம் நாள்

 

                             குணப்படு பாவி” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

                   துறவற மேவி - வேத

                   தோரணையே கூறி - யோவான்.

 

                             அனுபல்லவி

 

            அறம்பொருளின்ப வீடு மடைந்தவன்

            ஆதரை மீதினில் மாதவஞ் செய்தவன் - துறவற

 

                             சரணங்கள்

1.         மலடி பெற்ற மகன் - அந்த

            மவுனிக் குற்ற சுதன்

            தலைமை பெற்றவன் காண் - காட்டில், தனித்த சந்யாசி

            பலவி தமுள்ள பரிசேயர் சதுசேயர்

            பணிந்த தீட்சையும் வாங்கிடச் செய்தவன் - துறவற

 

2.         இந்தப்பு வனந்தனில் - அவன், எரிந்து ஒளி வீசும்

            விந்தைவி ளக்கொளிபோல்-வேதம், விளங்கப் போதித்துமே

            அந்தப் போர்ச் சேவகர் ஆயக்கா ரரெல்லாம்

            வந்து மன மாறி வாங்குந் தீட்சையென்றான் - துறவற

 

3.         சுய வெறுப்புடையோன் - பாவ, வினை மறுப்பு டையோன்

            தயவு ருக்கமுடன் - தூய, தன்மை நிறைந் திடுவோன்

            பய முறுத்தியே பாவிக ளஞ்சிட

            பரலோக இராச்சியம் வந்தது என்றவன் - துறவற

 

4.         எலியா வின் னாவி-வரம், ஏற்றுப் புவி மேவி

            சொலியாய் ஞானதீட்சை - யோர்தான், சுற்றிலுந் தான்

            கலியாய் நின்ற கரடர் முரடரைக்

            கட்டுக் கடங்காரைக் குட்டத்தி லாழ்த்தினன் - துறவற

 

5.         மேசியா முன் தூதன் - அவர், மேதினியில் வழியை

            ஆசையாய் ஆயத்தமாய் - வைத்து, அடி பணிந்த நின்றான்

            ஓசையாய்ச் சத்தமாய் ஓங்கிப் பிர சங்கித்து

            நீதியை யாவர்க்கும் நிறையக் காட்டினன் - துறவற

 

6.         கச்சை யரைக்க சைத்துக்-காட்டு, ஒட்டகத் தோலுடுத்து

            இச்சையன் ஏரோதை-அது, இலட்சை யென் றெச்சரித்து

            மச்சீரஸ் கோட்டையில், மன்னும் சிறையினில்

            மாது ஏரோதியா ளாலே மடிந்தவன் - துறவற

 

7.         இயேசு சபையோரே - நீங்கள், என்றுமே சாட்சி சொல்லும்

            மாசு மறு வுடையோர்-மனம், மாறிடப் போதித்திடும்

            கூசாமல் இயேசுவின் நாமம் புகன்றவர்

            ஆசார நீதியில் ஓசாரம் பெறுவர் - துறவற

 

- S. உவால்டர் கவிராயர், தென்மலை.

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு