13 May 2024

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே

தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவ ஜனமே பாவத்தில் விழுந்தே

                        தேவ கிருபை பெலன் இழந்ததே

                        தேடி மீட்டிடுமே என் இயேசுவே

 

1.         ஆதி அன்பெல்லாம் வாழ்வில் குறைந்தே

            ஆடம்பரம் நிறைந்தே பின் மாறினார்

            மங்கும் திரிகளெல்லாம் அணையுதே

            மனதுருகிடுமே

 

2.         தியாகம், எளிமை, தாழ்மை மறந்தே

            சிநேகம், உலகினிலே செலுத்தினார்

            ஆதி பிரதிஷ்டைகளும்

            உடைந்ததே ஜோதி மங்கிடுதே

 

3.         கள்ளங் கபட வேலையாட்கள்

            கால்கள் அலைந்திடுதே கெடுத்திட

            நித்ய சுவிசேஷ நன்மைக்குத்தான்

            நிதமும் தூஷணமே

 

4.         அந்தி கிறிஸ்து அற்புதங்களால்

            மந்தையைக் கலக்கி வஞ்சிக்கவே

            தேவன் தெரிந்தெடுத்த பேதைகளும்

            தவறி செல்கின்றனர்

 

5.         வல்லமை மிகும் இயேசு நாமம்

            கொல்லும் சாத்தானையும் பெலமுடன்

            கர்த்தர் கடிந்து கொள்வார்

            பிசாசை காலின் கீழ் மிதிப்பீர்

 

6.         நல் விசுவாசம் காணப்படுமோ

            நேசர் வருகையிலே எப்படியும்

            உந்தன் மணவாட்டி சபைதனை

            உயிர்ப்பித்தே அழைப்பீர்

 

 

- சாரா நவரோஜி

 

 

 

https://www.youtube.com/watch?v=i28oGmgly3Q

https://www.youtube.com/watch?v=ISzIT-EQcgs

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...