01 May 2024

துதிப்பேன் நேசர் இயேசுவையே

துதிப்பேன் நேசர் இயேசுவையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதிப்பேன் நேசர் இயேசுவையே

                        துதிகள் செலுத்தியே

                        கர்த்தரின் செயல்கள் என்றென்றுமே

                        எண்ணிலடங்காதோர் ஆச்சர்யமே.

 

                                    சரணங்கள்

 

1.         பாரில் எம் பாவம் யாவும் தீர்த்தார்

            பரத்தில் ஆவல் தீர்ப்பார்

            அகமதில் சந்தோஷம் ஈந்தார்

            அவர் நாமம் என்றும் போற்றிடுவேன் - துதிப்பேன்

 

2.         பாவ சாபங்கள் ரோகங்களை

            நேசர் இயேசு சுமந்தார்

            அகத்தில் எந்தன் துணையானார்

            அவர் துதி என்றும் சாற்றிடுவேன் - துதிப்பேன்

 

3.         சத்துரு சேனை தாக்கும் நேரம்

            பத்திரமாகக் காத்தார்

            யுத்தம் எனக்காய் நடத்தினார்

            நித்தமும் துதித்தே பாடிடுவேன் - துதிப்பேன்

 

4.         காரிருள் சூழ்ந்த வேளைகளில்

            கர்த்தர் என் ஒளியானார்

            கரம் பிடித்தே ஆதரித்தார்

            கருத்தாய் அவரைப் போற்றிடுவேன் - துதிப்பேன்

 

5.         கை வேலை யல்லா வீட்டினிலே

            கொண்டெனைச் சேர்த்திடுவார்

            ஆளுவேன் நேசர் இயேசுவோடே

            வாழ்ந்திடுவேன் அவரோ டென்றுமாய் - துதிப்பேன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...