அனைத்தையும்
அருளிடும்
எனக்கென தந்திடும்
வலக்கரம் என்னை உயர்த்திடும்
என் தேவனே
யெகோவாயீரே, யெகோவாயீரே
யெகோவாயீரே, யெகோவாயீரே -
அனைத்தையும்
1. புல்லுள்ள இடங்களில் எந்தனை
நித்தமும் சுகமாய் நடத்திடும்
அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்திடும்
என் தேவனே - யெகோவாயீரே
2. செட்டையின் நிழலில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல் என்னை சுமந்திடும்
என் தேவனே - யெகோவாயீரே
3. சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில்
அன்றே நான் சுகமானேனே
என் தேவனே - யெகோவாயீரே
4. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே - யெகோவாயீரே
No comments:
Post a Comment