தூய்மையே வலிமை கேளீர்

தூய்மையே வலிமை கேளீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தூய்மையே வலிமை கேளீர்!

                        வாய்மையே உயர்வு காணீர்!

                        இயேசுவில் இரண்டும் பெறுவீர் (2) தூய்மையே

 

1.         சந்திரன் பாதையைக் கண்டாய்

            சமுத்திர ஆழத்தை வென்றாய் - 2

            தூய்மையின் பாதைதான் எங்கே?

            எனப் பதில் ஏதும் உலகினில் இல்லை! - தூய்மையே

 

2.         தத்துவம் பேசுவார் உண்டு

            தர்க்க சாஸ்திரம் புரட்டுவார் உண்டு - 2

            கல்வி கொடுப்பது அறிவு

            ஆனால் தேவன் அருளுவது ஞானம்! - தூய்மையே

 

3.         அழிக்கவும் ஆக்கவும் அணுதான்

            பலபல புதுமைகள் நலம்தான் - 2

            யாவையும் கண்ட மனிதா

            மன தூய்மைக்கு மார்க்கம் சொல் எனக்கு! - தூய்மையே

 

4.         பரிசுத்த ஆவியின் நிறைவு

            பரிசுத்தமானதோர் வாழ்வு - 2

            வெற்றியின் ஜீவியம் கொள்ள

            இயேசு அழைக்கிறார், இணங்கி நீ செல்ல! - தூய்மையே

 

 

https://www.youtube.com/watch?v=z6dEk8KRxXo

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு