தள்ளப்பட்ட கல் நான்

தள்ளப்பட்ட கல் நான், தடுமாறும் நிலை தான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        தள்ளப்பட்ட கல் நான், தடுமாறும் நிலை தான் - 2

                        தாங்கிடும் தெய்வமும் நீர்தானையா - 2

                        தப்புவிக்கும் துணையே வாருமையா - 2

 

1.         ஆகாதவன் போல நானும் மாறிவிட்டேனோ

            அடுப்பினடியில் கிடக்கும் பதர் சாம்பலானேனோ

            ஆற்றித் தேற்றி அரவணைக்க எவருமில்லையோ

            அன்பு காட்ட நாதி இல்லா தனி மரந்தானோ - 2

 

2.         இகத்தில் வாழும் வாழ்க்கையினில் வாசமில்லையோ

            இடுக்கன் செய்யும் மனிதர்களால் மோசம் போனேனோ

            இன்னல் துன்பம் தாக்கும் போது கலங்குகின்றேனே

            இதய பாரம் புரிந்து கொள்ள ஆட்களில்லையே - 2

 

3.         உலக வாழ்வின் உறவு எல்லாம் வேஷமாகுதோ

            உற்றார் சுற்றார் பாசமெல்லாம் போலி ஆனதோ

            உள்ளம் உடைய பேசுவதால் தூக்கம் தொலைந்ததே

            உண்மை அன்பை காட்டிடும் காலம் வராதோ - 2

 

4.         எத்தனையோ வித பயங்கரங்கள் சூழ்ந்து கொண்டதே

            எண்ணம் விருப்பம் ஏக்கமெல்லாம் நொறுங்கிப் போகுதே

            எஜமான் உம்மையே நோக்கி பார்ப்பேனே

            என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீரே - 2

           

- சகோ. பழனி S. சாமுவேல்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு