வேத புத்தகமே என் தேவன் தந்த புத்தகமே
வேத புத்தகமே
என் தேவன் தந்த
புத்தகமே - (2)
சத்தியமே
நித்தியமே ஆவியின்
பட்டயமே - (2) - வேத
1. வானமும்
பூமியும் அழிந்தாலும்
அழியாத
வார்த்தை அங்கு
உண்டே - 2
அழிவில்லா
நித்தியத்திற்கு
திறவுகோலாய்
தந்தீரைய்யா -
2 - வேத
2. தேவனே
உமது செய்கை யாவும்
அறிவுக்கெட்டா
தூய அன்பும் - 2
உமது
வல்லமை சாட்சிகள்
அறிந்து
உணர தந்தீரைய்யா
- 2 - வேத
3. இரவும்
பகலும் தியானிக்கின்றேன்
தேவன்
என்னோடு பேசுகின்றீர்
- 2
உம்
வசனத்தில் ஜீவன்
உண்டே
ஆத்துமாவை
உயிர்ப்பித்தீரே
- 2 - வேத
- Pr. Chella Kumar
Comments
Post a Comment