மிகையாகத் தூஷணித்துச்

மிகையாகத் தூஷணித்துச்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

97. இராகம்: மோகனம்                                       ரூபகதாளம் (407)

 

                             தரு

 

1.       மிகையாகத் தூஷணித்துச்

            சகலாத்து மேல் சட்டை ஒன்றிட்டு-யூதர்

            வேந்தன் எனச் சேவகர்தாம்

            காய்ந் திசைத்த கோரணியென்? தேவே

 

2.         பகைகாரப் பாவிகளைத்

            தொகையாக வானுலகில் சேர்த்து-அங்கே

            பார்த்திபராய்ச் சமுகத்தினில்

            ஏற்றிவைக்க வேண்டி அன்றோ மாதே?

 

3.         முள்ளின் ஒரு முடி சமைத்து,

            வள்ளல் உம்தன் சிரத்தழுத்தி வைத்தே-ஞு

            மூங்கில் தடியால் அடிக்க

            ஓங்கு துயர் அடைந்தீரோ? கோவே?

 

4.         தெள்ளி முகம் மினுக்கி, மிகச்

            சிரத்தை அலங்கரித்துக் கந்தை தீர்த்து - நித்ய

            ஜீவன் முடி உன் தலையில்

            ஓவியமாய்ச் சூட்ட அன்றோ மாதே?

 

5.         நன்னயஞ் சேர் என்னுத்ம

            நாயகமே, மெய்க்கிறிஸ்து வேந்தே-நீர் செய்

            நன்றி குன்றாதே ஒழுக

            என்றும் எனக்கருள் புரியும் - தேவே

 

6.         கன்னியரே, சீயோனின்

            மின்னரசே, ஞானமடமானே, உன்னைக்

            காத்தருள்வோம், மணவீடு

            சேர்த்தருள்வோம், கலங்காதே மாதே.

 

- வே.சா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே