மாதுக்கோர் மணவாளனே வகுத்த ஞான
311.
இராகம்: பைரவி மீரக
தாளம் (472)
பல்லவி
மாதுக்கோர்
மணவாளனே, வகுத்த
ஞான மணாளனே
அனுபல்லவி
ஆதமேவையர்க்
கன்று தந்தருள்
ஆசீர்வாதமெலா
முவந்தருள்
- மாது
சரணங்கள்
1. ஆலயந்தனில்
வந்திடும்; அடியார்க்
குமதருள்
தந்திடும்,
சீலனே, மறைநூலனே,
மரிபாலனே,
யனுகூலனே,
முன்பு - மாது
2. ஆகமோடுயிர்[1] போலவே
அமையவே யிவர் சாலவே
பாகம்
நீங்க, விவாகமென்பது
பாரிநாயகர்
பற்றுமன்பது
- மாது
3. பாக்கியத்தினிற்
பாக்கியம் பகருமே மனப்பாக்கியம்,
சீக்கிரஞ்
செலும் செல்வப்
பாக்கியம், சிதைவுறா தொழிற்
கற்பு யோக்கியம்
- மாது
4. புத்ர பாக்கியமருளுவாய்
புகழும் வாழ்வு
தந்தருள்வாய்
சத்தியம்
தயை, சாந்தம், இன்னுரை, தம்பதிக்கியல்பாகும்
நல்லுரை - மாது
- சு.ச.
ஏரேமியா, தெல்லிவினை,
இலங்கை.
Comments
Post a Comment