மனமே ஓ உன்னதம் மறை தந்தவனே

மனமே ஓ உன்னதம் மறை தந்தவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

67. இராகம்: காம்போதி                            ரூபகதாளம் (397)

 

                             பல்லவி

 

          மனமே, ஓ! உன்னதம், மறை தந்தவனே வந்தனர்

 

                             அனுபல்லவி

 

            கன மிகுந்த திருக்குமாரன் கருணையாய் நரர் உருவமாகினர் - மன

 

                             சரணங்கள்

 

1.         ஆதி சர்ப்பத்தின் தலையை உடைக்க,

            அகிலத்தின் பவமனைத்தும் துடைக்க;

            வேத மறையி னூடு சிறந்த மேசியா பிறந்தார் - மன

 

2.         ஆ! கனமிகு மகிமைத் தேவனார்

            யாவருக்கும் அருள் செய்ய மேவினார்;

            ஏக முதல்வனாம் ஒரு வஸ்து ஏசு ராஜ கிறிஸ்து - மன

 

3.         நானிலத்தில் நரர்[1] பிழைக்கவே,

            ஞான நன்மைகளே தழைக்கவே,

            வான ராச்சியம் சேர்ந்து வந்தது: மானுவேல் பிறந்தார் - மன

 

4.         நாம் நடத்தியபடி செய்யாமல்,

            நம்முடமேல் உக்கிரம் வையாமல்;

            ஆ! மகத்துவமே கதித்த அனாதியார் உதித்தார் - மன

 

- வே.சா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] மானிடர்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே