முன் செல்லும் தேவா என் இயேசு ராஜா

முன் செல்லும் தேவ என் இயேசு ராஜா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          முன் செல்லும் தேவா என் இயேசு ராஜா

          சேனையின் அதிபதியே - 2

            தடைகளை தகர்த்திடுமே

            எதிர்ப்பினை நொறுக்கிடுமே - 2

            தூய்மை மேல் தூய்மை வெற்றி மேல் வெற்றி

            இயேசுவின் நாமத்தினால் - 2

 

                        ஜெயம் நமக்கென்றும் அல்லேலூயா

                        ஜெயம் நமக்கென்றும் ஆமென் ஆமென் - முன்

 

1.         வருட முழுவதும் ஒவ்வொரு நாளும்

            வழிகாட்டி சென்றிடுமே - 2

            வலக்கரம் பிடித்திடுமே

            வழுவாது காத்திடுமே - 2

            வாழ்நாள் முழுவதும் உம் பணி செய்தி

            அபிசேகம் செய்திடுமே - ஜெயம்

 

2.         ஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய் மேகம்

            ஒரு நாளும் விலகிடாதே - 2

            மனிதர் விலகிடலாம்

            மலைகளும் விலகிடலாம் - 2

            மாறாத கிருபை நீங்காத தயவு

            என்றென்றும் எனக்குண்டே - 2 - ஜெயம்

 

3.         உம் வாக்கை பிடித்து முன்னேறி செல்லுவேன்

            ஜெயமாய் நடத்துவீரே - 2

            வருகையில் வந்திடுவீர்

            கிரீடங்கள் தந்திடுவீர் - 2

            உம் மார்பில் மகிழ்ந்து நேசத்தை ருசித்து

            வாழுவேன் நித்தியமாய் - 2 - ஜெயம்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே