மூச்சொடுங்கும்

மூச்சொடுங்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

205.

 

                             “அப்பா தயாள குணானந்த” என்ற மெட்டு

 

1.       மூச்சொடுங்கும் நேரம் முடிந்தது என்றீரே       இயேசு நாதா

          மூவரும் செய்த ஆலோசனை முடிந்ததோ        இயேசு நாதா

 

2.         ஆவியால் பேசின தீர்க்கரின் வார்த்தைகள்      இயேசு நாதா

            மேவிச் சிலுவையைத் தாவி முடிந்ததோ          இயேசு நாதா

 

3.         முந்தின ஏற்பாடு முன் னடையாளங்கள்             இயேசு நாதா

            முற்றும் மறைந்து முழுதும் முடிந்ததோ             இயேசு நாதா

 

4.         தேவாசனம் விட்டுப் பூதலமே வந்த                   இயேசு நாதா

            தேவ சித்த நோக்கம் யாவும் முடிந்ததோ          இயேசு நாதா

 

5.         மாண்டு மனிதரை மீட்டுக் கொண்டதினால்       இயேசு நாதா

            மானிட இரட்சிப்பு முற்றும் முடிந்ததோ            இயேசு நாதா

 

6.         மீட்பின் கிருபையில் பாக்கியமில்லாமலே          இயேசு நாதா

            மீட்கப் பட்டோர்களின் இலக்கம் முடிந்ததோ   இயேசு நாதா

 

7.         எம் துன்பம் துக்கம் எல்லாம் முடிந்து போச்சே   இயேசு நாதா

            ஏழை இதற்கு நானென்ன பதில் செய்வேன்        இயேசு நாதா

 

8.         இன்னமு மும்முடை ஆவியின் வேலையை      இயேசு நாதா

            என்னில் முடித்து ஈடேறவே செய்திடும்              இயேசு நாதா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே