மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே

மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    மானானது நீரோடையை வாஞ்சிப்பது போலவே

                        எந்தன் ஆத்துமா உந்தன் அன்பிலே

                        தாகம் கொண்டிருக்கின்றதே - 2

 

            உம்மைக் காண நித்தம் ஓடி வந்தேன்

            உந்தன் பாதம் முத்தங்களால் நனைக்கின்றேன் - 2

 

                        இயேசுவே நீர் பேசுமே! இயேசுவே பதில் தாருமே

                        இயேசுவே துணை செய்யுமே!

                        இயேசுவே வழி காட்டுமே

 

1.         ஆத்துமாவிலே வருத்தங்கள் கலக்குகின்றதே

            ஆறுதல் இன்றி வாழ்வோ தவிக்கின்றதே - 2

            ஆவியானவரே உந்தனின் ஆளுகை - (2)

            ஆசீர்வாதமாக வந்து இறங்கட்டும் - (2)

 

                        அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2

 

2.         சத்துருக்கள் எனைச் சூழ்ந்து நெருங்கும் போதெல்லாம்

            சத்துவத்தை இழந்து துடிக்கின்றேனே - 2

            சத்திய வேந்தனே உந்தனின் வாக்கு - (2)

            சடிதியான மாற்றத்தை உருவாக்கட்டுமே - (2)

 

                        அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2

 

3.         தண்ணீரைப் போல இதயம் உருகுகின்றதே

            தவிப்பினால் மனதுக்கம் அடைகின்றதே - 2

            தயவுள்ள பிதாவே உந்தனின் கரத்தால் - (2)

            தகைவிலான் குருவி போல போஷித்தருளும் - (2)

 

                        அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2

 

 

- சகோ. பழனி S. சாமுவேல், இயேசுவே ஆளுகிறவர் ஊழியங்கள்.

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே