ஆதியிலே
வார்த்தையாகி ஆதிபன் பிறந்தாரே
ஆதாம்
பாவம் போக்க வந்த அற்புத பாலகனே - (2)
1) விண்ணிலே
உதித்த விண் ஜோதியே
மண்ணிலே
மலர்ந்த மாணிக்கமே - 2
கண்ணே
என் கண்மணியே ஆரிரோ ஆராரிரோ
பொன்னே
என் பொன்மணியே ஆரிரோ ஆராரிரோ - 2 - ஆதியிலே
2) தீர்க்கரின்
வாக்கு நிறைவேறிட
தீர்க்கமாய்
இயேசு வந்துதித்தார் - 2
தித்திக்கும்
தீங்கனியே ஆரிரோ ஆராரிரோ
தீன தயாளனே
ஆரிரோ ஆராரிரோ - 2 - ஆதியிலே
3) என்னையும்
உன்னையும் இரட்சிக்கவே
தன்னையே
பலியாய் தந்தவரே - 2
சாலேமின்
ராஜாவே ஆரிரோ ஆராரிரோ
சாரோனின்
ரோஜாவே ஆரிரோ ஆராரிரோ - 2 - ஆதியிலே
- Mr. R. Kennedy Rajamani (Casiotone Orchestra, Mumbai)
No comments:
Post a Comment