மன்னிப்புத் தாருமையா என் மணவாளனே

மன்னிப்புத் தாருமையா என் மணவாளனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மன்னிப்புத் தாருமையா என் மணவாளனே

            எனக்குள் வாருமையா என் எஜமானனே - 2

 

                        மணவாளனே மணவாளனே

                        எஜமானனே என் இயேசு ராஜனே - 2 - மன்னிப்புத்

 

1.         பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா

            உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா - 2

            என் ஆண்டவரே என் சிருஷ்டிகரே

            பாவம் போக்கப் பலியானீரே - 2

            என் ஆண்டவரே என் சிருஷ்டிகரே

            உந்தன் பாதம் சரணமைய்யா (நான்) - (2) - மணவாளனே

 

2.         எந்தன் மனதில் ஆறுதல் இல்லை

            என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா - 2

            என் ஆறுதலே என் ஆண்டவரே

            யாரிடத்தில் போவேனையா

            என் ஆறுதலே என் ஆண்டவரே

            உம்மிடந்தான் சொல்வேனையா (நான்) - (2) - மணவாளனே

 

3.         உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன்

            புது ஆவியால் நிரப்பிடுமைய்யா - 2

            என் புகலிடமே என் புது பெலனே

            உந்தன் சாயலாக மாற்றுமே

            என் புகலிடமே என் புது பெலனே

            உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன் (நான்) - (2) - மணவாளனே

 

 

 

- Pr. Chandra Sekaran

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே