மனுக்குலம் மீட்க மனுவுருவானார் மாதேவனே

மனுக்குலம் மீட்க மனு உருவானார்மா தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மனுக்குலம் மீட்க மனுவுருவானார் மாதேவனே

                        மகிழ்ந்திடுவோம் களித்திடுவோம்

                        அல்லேலூயா துதி அல்லேலூயா

 

1.         மாதர் சிரோன்மணி கன்னி மரியாள்

            மடியிலே உதித்து மகனாக பிறந்தார்

            தூதர்கள் வானில் கீதங்கள்-பாடி

            அல்லேலூயா அல்லேலூயா

 

2.         தூதர்கள் இழந்த மேன்மையில் வைக்க

            பாதக மனிதரை ஆயத்தப்படுத்த

            தாழ்மையின் தவக்கோலம் அவர் தரித்தார்

            ஏழ்மையின் சாயலாய் அவதரித்தார்

 

3.         அரசருக்கு அரசர் அருந்தவ புதல்வர்

            அரியணை துறந்து முன்னணை தெரிந்தார்

            பாடுகளை அனுபவிக்க

            மாட்டுத் தொழுவம் தெரிந்தெரித்தார்

            அல்லேலூயா அல்லேலூயா

 

4.         காரிருள் அகன்றது பேரொளி உதித்தது

            பாரினில் பாவம் ஓடி மறைந்தது

            சந்தோஷம் சமாதானம் உன் உள்ளத்தில்

            நிரம்பி வழியுதே அல்லேலூயா

 

5.         இயேசுவின் பின் செல்லும்-தேவ மக்களே

            இயேசுவைப் போல் நீங்கள் செயல்படுங்கள்

            அவர் சென்ற பாதையை பின்பற்றுங்கள்

            அவரைப் போலவே மாறிடுங்கள் - அல்லே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே