முன்னேறுவோம் நாம் நேசர் பாதையில்
முன்னேறுவோம்
நாம் நேசர் பாதையில்
முன்னேறுவோம்
நம் இயேசு செல்கிறார்
முன்னேற்றமே
ஜீவியமே
முன்
வைத்த காலை பின்
நோக்கிடலாம்
1. லோக வேஷத்தை
முற்றும் வெறுப்போம்
லோக இன்பத்தை
பின்னே தள்ளுவோம்
ஆவியிலே
நாமும் வளர்வோம்
இயேசுவின்
நாமத்தை எங்கும்
சாற்வோம்
2. ஜீவ வாக்கினை கையில்
ஏந்துவோம்
தீயோர்
மத்தியில் தீபமேற்றுவோம்
சத்தியமாம்
கச்சை கட்டியே
சாத்தானின்
சேனையை ஜெயமெடுப்போம்
3. தேவன் நியமித்த
ஓட்டமதிலே
நோக்கியே செல்லுவோம்
இயேசுவை
நித்தம் பின் செல்லுவோம்
மீட்பர்
செல்கிறார் ஜீவனை
தியாகமாய்
வைத்து
செல்லுவோம்
4. எண்ணிடலங்கா
ஜாதிகளையே
இயேசுவின்
பாதம் கொண்டு வருவோம்
தூண்களை
போல் நாமும் தாங்குவோம்
தேவனின்
சேவையில் சேர்ந்து
உழைப்போம்
5. ஆதி சீரினை நாமும்
அடைவோம்
பூர்வ நாட்களின்
மேன்மை பெறுவோம்
கர்த்தரின்
வாக்கினை
சொந்தமாக்குவோம்
தேவனின்
ஆசீரை நாமும்
பெறுவோம்
Comments
Post a Comment