மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா

மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    மன்னிப்பு மன்னிப்பு மன்னிப்பு தேவா

                        மன்னிப்பு மன்னிப்பு தாருமே இறைவா

                        மன்னிப்பு தாருமே இறைவா

 

1.         ஆண்டவர் ஆன்மாவை விரும்புகின்றார்

            மாண்டிட்ட ஆன்மாவைத் தேடுகின்றார்

            அண்டிடும் பாவிக்கு அருளுகின்றார் - நேரில்

            வேண்டிடும் துரோகிக்கு இரங்குகின்றார்

 

2.         ஆண்டவர் ஞானத்திற் கினிமையுண்டு

            கண்டிக்கக் காலத்தைக் கடத்துகின்றார்

            கண்டித்துக் கருணைச் சொல் கூறுகின்றார் - பாவி

            திருந்திட அருள்கொடை வழங்குகின்றார்

 

3.         குற்றங்கள் இல்லையே என்று சொன்னால்

            நம்மைத்தான் ஏமாற்றி நலிந்திடுவோம்

            குற்றங்கள் அனைத்தையும் எடுத்துவைத்தால் - தேவன்

            குற்றத்தை மன்னித்து வாழ்வளிப்பார்

 

4.         பாவத்தை வெறுத்துத் தள்ளிடுவோம்

            ஆபத்தை விலக்கிச் சென்றிடுவோம்

            ஆன்மாவை அவரிடம் காட்டிடுவோம் - அதன்

            அவலங்கள் கழுவிட வேண்டிடுவோம்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே