முன்னேறிச் செல்வீர் பின் நோக்காமலே

முன்னேறிச் செல்வீர் பின் நோக்காமலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          முன்னேறிச் செல்வீர் - பின் நோக்காமலே

            வென்றேறிச் செல்வீர் - இயேசு நாமத்தில்

            செல்லும் எவ்விடம் - ஆட்கொண்டிடுவீர்

            வெற்றி வேந்தன் இயேசு ராஜன்

            வெற்றி சிறந்தார்.

 

                             சரணங்கள்

 

1.         நற் செய்தியினை சுமக்கும் பாதங்கள்

            மலைகளில் எத்தனை அழகானதே

            கர்த்தர் உங்களைக் கடைசிவரைக்கும்

            காத்துக் கொள்வார் அணைத்துக் கொள்வார்

            ஆசீர்வதிப்பார் - முன்னேறி

 

2.         பயப்படாதே நீ திகைத்து நில்லாதே

            உன்னுடன் எப்போதும் நானிருக்கிறேன்

            பெலப்படுத்தி சகாயம் பண்ணி

            என் நீதியின் வலது கரத்தால்

            உன்னை தாங்குவேன் - முன்னேறிச்

 

3.         உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறேன்

            என்றுமே எங்குமே நீ என்னுடையவன்

            கண்ணின் மணிபோல் காத்துக்கொள்ளுமேன்

            வாக்கு மாறா இயேசு தேவா

            வழி நடத்துமேன் - முன்னேறி

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே