மாட்டு வண்டியைப் பூட்டிக்கிட்டு மாவடிக்குப்
1) மாட்டு
வண்டியைப் பூட்டிக்கிட்டு
மாவடிக்குப்
போகணுமே
மக்களப்
பார்த்து இயேசு
சுவாமி
அன்பைப்
பத்தி சொல்லணுமே
2) குதிரை
வண்டில நானும்
ஏறி
குற்றாலத்துக்குப்
போகணுமே
குருதி
சிந்தி நம்மை மீட்ட
இயேசுவைப்
பத்தி சொல்லணுமே
3) ரயிலு
வண்டில நானும்
ஏறி
ராயகிரிக்குப்
போகணுமே
ரட்சிக்க
வந்த தெய்வமென்று
இயேசுவை
பத்திச் சொல்லணுமே
4) உந்து
வண்டியில
நானும் ஏறி
ஊத்து
மலைக்குப் போகணுமே
உலக ரட்சகர்
இயேசு வென்று
ஊராருக்குச்
சொல்லணுமே
5) ரிக் ஷா
வண்டில நானும்
ஏறி
நாஞ்சான்குளம்
போகணுமே
ராஜன் இயேசு
அன்பைப் பத்தி
ருசிக்க
ருசிக்க சொல்லணுமே
6) வில்லுவண்டியில
ஏறி மேல
இலந்தைக்குளம்
போகணுமே
வல்லவர்
இயேசு அன்பைப்
பத்தி
எல்லாருக்கும்
சொல்லணுமே
7) பேருந்துல
நானும் ஏறி
சீவலசமுத்திரம்
போகணுமே
தூயர் இயேசு
அன்பைப் பத்தி
துரிதமாக
சொல்லனுமே
8) கட்ட வண்டியில நானும்
ஏறி
சேர்மாதேவி
போகணுமே
கர்த்தர்
இயேசு தெய்வமென்று
கருத்துடனே
சொல்லனுமே
Comments
Post a Comment