இது அழகாக கிறிஸ்மஸ் காலம்தான்

இது அழகாக கிறிஸ்மஸ் காலம்தான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        கிறிஸ்மஸ் காலம் இது இயேசு பிறந்த காலம்

                        கிறிஸ்மஸ் காலம் இது இயேசு பிறந்த காலம்

 

          இது அழகாக கிறிஸ்மஸ் காலம்தான்

            இது குளிரான கிறிஸ்மஸ் நேரம் தான்

            மலர் அசைந்தாடுதே உளம் இசைந்தாடுதே

            மன்னன் இயேசு மண்ணில் ஊதித்தார் - (2)

 

                        இது அழகான கிறிஸ்மஸ் காலம்தான் - கிறிஸ்மஸ் காலம்

 

1.         ஒரு வாடைக் காலத்தில் ஒரு நீல வானத்தில்

            வெள்ளி ஒன்று முளைக்கின்றது

            பாதை சொல்லி அழைக்கின்றது

            சிறு முன்ணணைக்குள்ளே ஒரு வண்ண ரோஜாவாம்

            அந்த சின்ன குடிலில் சாரோன் ரோஜாவாம்

            மஞ்சம் இல்லை பஞ்சம் இல்லை ஏழ்மை கோலம்தான்

            தொட்டில் இல்லை கட்டில் இல்லை தாழ்மை கோலம்தான்  -

            குடிவெள்ளை கோலம்தான்

 

                        இது அழகான கிறிஸ்மஸ் காலம்தான் - கிறிஸ்மஸ் காலம்

 

2.         உயர் பச்சை கிளைமேல், ஸ்டார்கள் பூக்கட்டும்

            வண்ண ஸ்டார்கள் கண்ணை ஈர்க்கட்டும்

            அந்த ஞானிகளின் கதை சொல்லட்டும்

                        கிறிஸ்மஸ் என்றாலே இரு ரெக்கை முளைக்கும்

                        தூதர் போலத்தான் எழில் செட்டை முளைக்கும்

                        தென்றல் வந்து பூக்கள் தூவும் வண்ண ராவினில்

                        திங்கள் வந்து பாடல் கேட்கும் இன்ப ராவினில்

                        - சுதன் இந்த பூவினில்  - இது அழகான

 

 

- Dr. V.C. Amuthan

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே