மாறாத நல் விசுவாசம்

மாறாத நல் விசுவாசம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மாறாத நல் விசுவாசம்

                   பரன் நம் இயேசு தேவனில் வைத்திடுவோம் - 2

                        அகன்றிடும் மலைகளும் அதிசயம் வெளிப்படும் - 2

 

1.         விசுவாச வார்த்தையினால்

            இதயம் நிரம்பி வழிந்திடும்

            அகமதினில் விசுவாசம்

            என்றும் ஜெயம் தரும்

 

2.         கிரியையில்லா விசுவாசம்

            ஏதும் செய்திட உதவாது

            செயல்படும் விசுவாசம்

            என்றும் ஜெயம் தரும்

 

3.         லோகமதின் இன்பங்களை

            விரும்பி மனதில் தொடராமல்

            விசுவாசத்தால் பெலனடைவோம்

            நம் தேவன் தாங்குவார்

 

4.         துன்பங்களோ நெருக்கங்களோ

            இடறல்கள் வரினும் கலங்காமல்

            விசுவாச ஆவியினால்

            என்றும் மேற்கொள்ளுவோம்

 

5.         மகிமையினை சுதந்தரிக்க

            மகிபன் அவரில் நிலைத்திடுவோம்

            விசுவாச பலன்தனை

            அடைந்தென்றும் மகிழுவோம்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே