மனமே தளராதே மனமே தளராதே
மனமே தளராதே
மனமே தளராதே
மாரநாதன்
அருகில் உண்டு
மனமே தளராதே
1. அதிசீக்கிரத்தில்
விலகிப் போகும்
லேசான
உபத்திரவம்
அதிகமான
கன மகிமை
விரைவிலே உண்டாகும்
2. உலகத்தில்
இருக்கும் அவனை
விட
நம்
இயேசு பெரியவரே
சமாதான
தேவன் சீக்கிரமாய்
சாத்தானை
நசுக்கிடுவார்
3. உலகிலே
உபத்திரவம் உனக்குண்டு
ஆனாலும்
தைரியம் கொள்
நமக்கெதிரான
கடன் பத்திரம்
சிலுவையில்
தீர்த்து விட்டார்
4. மனவேதனையின்
அனுபவங்கள்
மீட்பாக மாறட்டுமே
கடவுளின்
திருவுள துயரங்கள்
மனமாற்றம்
உண்டாகும்
5. விசாரிப்பாரற்ற
சீயோனே
தள்ளுண்ட
என் பிள்ளையே
நான்
உனக்கு பெலன் தந்து
உன்
காயங்கள் ஆற்றிடுவேன்
6. கண்ணீர்
கவலை நெருக்கங்களால்
பின்
வாங்கிப் போகாதே
பரிசுத்த
ஆவியின் ஆற்றலினால்
தாழ்மையாய்
ஊழியம் செய்
Comments
Post a Comment